Monday, August 30, 2010

படித்ததில் பிடித்தது




என் வாழ்க்கை 
 

என் விருப்பம் 


 ஆசை




ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை - ஆனால்
 

அவனுக்கோ தன்னை ஒருமுறையாவது

பார்க்கவேண்டும் என்று ஆசை !

கண் பார்வையற்ற ஒருவன் !




 விபத்து 


தினமும் பலர் இரத்ததானம் செய்கின்றனர்

மருத்துவமனையில் அல்ல !

சாலைகளில் ! 




கொல்லும் புன்னகை 

மணிக்கணக்கில் பேசி

முடித்ததும்

கேட்பாய் நான்

போகட்டுமா என்று...

உலகம் அழியும்

கடைசி நொடியை விட

கொடுமையாய் இருக்கும்

எனக்கு அந்த நொடி...



அடுத்து எப்ப

பாக்கலாம் என்ற

கேள்விக்கு பதில் சொல்லாமல்

சென்று விடுவாய் புன்னைகையை

மட்டும் உதிர்த்து விட்டு...

குருதி வடியும் புண்ணில்

பாய்ந்த குண்டு போல்

உன்னை காணும் வரை

அந்த புன்னைகை

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை


கொன்று கொண்டு இருக்கும்